மேற்கு தொடர்ச்சி மலை விமர்சனம்

Posted on August 25, 2018. Filed under: Kathir Movie Review | Tags: , , , , , |

‘மேற்கு தொடர்ச்சி மலை’ படம் பார்த்துட்டு வந்தப்பறம் கூட இன்னும் அதுல இருந்து வெளிய வர முடியலைங்க, உங்கள யாராவது காலைல 4 மணிக்கு நல்லா மழை பேயும்போது எழுப்பிவிட்டா எவ்ளோ கோபப்படுவீங்க, ஆனா அந்த பகுதி மக்கள் இதை தினம் காலைல எழுந்திருச்சி தங்களோட வேலைய தொடங்கறாங்க, இப்படி அந்த ஊர்ல வாழற ஜனங்க தங்கோளோட வாழ்க்கைய நகர்த்துததுக்கு தேவையான வருமானம்,உதவி, மனிதநேயம், அரசியல், சுரண்டல் இப்படி பல விஷயங்களை பதிவு செஞ்சுருக்கு. நில மற்றவங்கள கடைசி வரைக்கும் நிலமற்றவங்களாவே எப்படி இருக்க வைக்கிது அப்படிங்கற விஷயத்தை நல்லா அழுத்த திருத்தமா சொல்லிருக்கு இந்த படம்.

அங்க வாழுற மனசுங்க ஒன்னும் கோடி கணக்குல பணத்தை சேர்க்க கஷ்டப்படல. வாழ்க்கையை ஓட்ட ஒரு பத்துருவ காசு அவ்வுளவுதான். ஒரு சீன்ல ஏலக்கா மூட்டையை தூக்கிட்டு ஒரு அஞ்சாறு பெரு நடந்து போவாங்க, அதுல ஒரு பெருசு தன்னோட ஆம்பள தனத்த கேலியோட பேசிட்டு போகும் பொது அவரால அந்த மூட்டையை சேமக்க முடியாம கீழ போட்ருவாரு அப்போ கூட வந்த ஆளுங்க அத பிரித்து எடுத்து போகும் போது, அந்த பெருசு போங்கடா நானே தூக்கிட்டு வரேன் அழுது கீழ விழற காட்சி மனச கசக்கி பிளிசிஞ்சிருதுங்க.

இப்படி குறுக்கு நெடுக்குமா இருக்குற மலைப்பகுதில அங்க இருக்குற மக்களை காலி பண்ண வச்சு ரோடு போடறாங்க அது யாருக்குனா, ஒரே ஒரு frame , ஒரு ஹேர் பின் பெண்ட் நெறைய வண்டிக போகுது. அதை பார்க்கும் போது இந்த சாலை யாருக்கானது? அப்படிங்கிற அரசியல் புரியும், இவ்வளவு அழுத்தமா ஒரு வலிய யாரும் பதிவு பண்ணல.

படத்துல லீட் ரோல் பண்ணவரு இடம் வாங்கி விவசாயம் பார்க்கணும் ஆசைப்படறாரு, ஆனா கால சூழ் நிலை அவருக்கு கல்யாண தேவைக்கு செலவாகுது, மனைவி வந்தப்புறம் ரெண்டாவது முயற்சி அதுவும் தன்னோட நண்பனால் தோல்வில முடியுது, அப்புறம் பின் ஒருவரின் உதவியால் நிலத்தை வாங்கிவிடுகிறார், விவசாயம் மழையால் பாதிப்படையுது, பிறகு ஒரு நல்ல தலைவனில்லாத அரசியல் காரணத்தால் சிறை செல்கிறான், திரும்ப வெளியே வரும் போது நிலம் கைவிட்டு போகிறது.

படத்துல ஒருத்தரு அந்த ஊருக்குள்ள எதுவுமே இல்லாம வந்து அந்த ஊரு ஜனங்கொளடா உதவியால, பெரிய பல தொழில் கொண்ட முதலாளி ஆகிடறாரு, கடைசில ஹீரோ வோட இடத்தையும் அவரே எழுதி வாங்கிடறாரு.

கம்யூனிஸ்ட் கட்சி காரரா ஒருத்தர் வராரு அவரும் கடைசில தன்னோட தவறான முடிவால ஹீரோ வையும் சேர்த்து ஒரு கூட்டத்தோட ஜெயிலுக்கு போயிறாரு, ஒரு சரியான தலைவன் இல்லேன்னா ஒரு போராட்டம் எப்படி திசை மாறுது அப்டிங்கறதையும், எதையுமே யோசிக்காம பின்னாடி போற அந்த மக்களோட அறியாமையும் சொல்லிருக்காங்க.

ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவங்க குடும்பம் அந்த லீட் ரோலுக்கு எல்லா கால கடத்துலையும் உதவி செய்ற மாறி காட்டிருப்பாங்க.
அந்த ஊரு ஜனங்களுக்குள்ள ஒற்றுமை, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கறது, ஒரு அழகான சூழ் நிலையில வாழ கூடிய மக்களுக்கு ஏன்டா இப்படி நடக்குதுன்னு படம் முடிஞ்சி வெளியே வரும் போது மனசு வலிக்குது.


Read Full Post | Make a Comment ( None so far )

Liked it here?
Why not try sites on the blogroll...